வைரலாகும் மைத்திரியின் Tik Tok பதிவு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் TikTok இல் “எல்லோரும் எனக்கு எதிரியாக இருக்க விரும்புகிறார்கள்” என்ற வாசகத்துடன் பாடலுடன் அவரது படங்களைக் காட்டும் பதிவு வைரலாகி வருகின்றது.
‘எல்லோரும் என் எதிரியாக இருக்க விரும்புகிறார்கள்…..
அனுதாபத்தை விட்டுவிடுங்கள், எல்லோரும் என் எதிரியாக இருக்க விரும்புகிறார்கள்’ என்ற பாடலின் பின்னணியில் மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம் வருகிறது .
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக சிறிசேன தற்போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.
கொடிய தாக்குதல்களுக்கு முன்னதாக வழங்கப்பட்ட முன்னெச்சரிக்கைகளை புறக்கணித்ததாக குற்றம் சாட்டி, அவரை சிறையில் அடைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே இந்த TikTok பதிவு வைரலாகி வருகின்றது.
Post a Comment