களமிறக்கப்படும் STF - அமைச்சர்களின் கலந்துரையாடலில் இணக்கம்
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக, விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது தொடர்பான கலந்துரையாடல் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சில் நடைபெற்றது.
நாட்டின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராம மக்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அண்மையில் ஏற்பட்ட அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment