முன்னாள Mp யின் மரணத்திற்கு காரணம் என்ன..? உறவினர்களிடம் உடல் கையளிப்பு
- பாறுக் ஷிஹான் -
வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்த அம்பாரை மாவட்ட முன்னாள் (எம்.பி)பொடியப்பு பியசேனவின் சடலம் மரணவிசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அம்பாரை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.
வெள்ளிக்கிழமை காலை 6.45 அளவில் பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான சாலையில் - சென்று கொண்டிருந்த பேருந்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற இவர் விபத்தினைச் சந்தித்திருந்தார்.
இவர் சென்ற மோட்டார் சைக்கிளே சேதமடைந்துள்ள நிலையில், கடுங்காயமுற்ற இவர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு வைத்தியசாலையில் மரணமடைந்த நிலையில் கல்முனை மாவட்ட நீதிவான் ஏ.எம் முகம்மட் றியால் கட்டளையின் பிரகாரம் மரண விசாரணை நடாத்திய பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் விபத்தினால் ஏற்பட்ட காயம் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்துள்ளதாக மரணவிசாரணை தீர்ப்பு வழங்கப்பட்டு உறவினர்களிடம் சடலம் மாலை கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment