தீயாக பரவும் பசிலின், சர்ச்சைக்குரிய குரல்பதிவு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் மொரட்டுவை நகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவிற்கும் இடையில் வாக்குவாதம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இவ்வாறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் மே தினம் குறித்து கலந்துரையாடுவதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழு கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது பசில் ராஜபக்ஷ மற்றும் சமன் லால் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் இந்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான குரல் பதிவு ஒன்று இன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Post a Comment