Header Ads



முன்னாள் LTTE உறுப்பினர் நடுக்காட்டில் கண்டுபிடிப்பு


புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர், நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீடக்கப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்துக்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுயிலிருந்து முன்னாள் போராளி ஒருவர் புதன்கிழமை (08.03.2023) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


கடந்த 4 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, முன்னாள் போராளியான மனநலம் குன்றிய பாலா என்பவர் தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள காட்டுப்பகுதியில் தூர்ந்துபோன கொட்டகை ஒன்றில் வசித்து வந்துள்ளார்.


இச்சம்பவம் தொடர்யில் தற்போது தகவலறிந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியினர், மற்றும் அவரது சக முன்னாள் போராளிகளும் அவரை அணுகியுள்ளனர். இவர்களைக் கண்டதும் பாலா கட்டுப் பகுதிக்குள் மறைந்து விடுவார். பின்னர் அவரை தொடர்ந்து இரவு பகலாக அவதானிந்து வந்துள்ளனர்.


 பின்னர் அவரது உறவினர்கள், மற்றும் அப்பகுதி கிராம சேவைகர் ஆகியோரது உதவியுடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உதவியுடன்,  உரிய இடத்திற்கே நோய்காவு வண்டி வரவழைக்கப்பட்டு அதில் சிகிச்கைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


இதுவரை காலமும் காட்டிலுள்ள பழங்களை உண்டு கொண்டு, குளிக்காமல், முடிவெட்டாமல், சுகாதார சீர்கேடான முறையில் அவர் வாழ்ந்து வந்துள்ளார். நாம் அவருக்கு புதிக ஆடைகளை மாற்றி வைத்தியசாலையிலிருந்து அவரைக் கவனித்துக் கொள்வதற்காகவும், மேலும் ஒருவரையும் அனுப்பி வைத்துள்ளோம். என ஜனநாயக் போராளிகள் கட்சியைச் சேர்ந்த நகுலேஸ் தெரிவித்தார்.


 வ.சக்தி   

No comments

Powered by Blogger.