IMF கடனால் இலங்கையர்களுக்கு, என்ன நடக்கப் போகிறது தெரியுமா..?
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் வசதியினால் இலங்கை மக்களின் உரிமைகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
வருமானத்தை அதிகரிக்கும் கொள்கைகளால் பொருளாதார, சமூக உரிமைகள் மேலும் சிதைக்கப்படாமல் காக்கப்பட வேண்டும் எனவும் ஊழல் எதிர்ப்பு சீர்திருத்தங்கள் மூலம் பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
செல்வந்தர்கள் சிலருக்கு நன்மை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களே இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்றாடம் வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களின் மீது சுமையை ஏற்படுத்தக்கூடாது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கும், தனது குடும்பத்துக்கும் தனது அடிவருடிகளுக்கும் சார்பாக பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து, அவற்றைச் சட்டமாக்கி தனது அடிவருடியான கோடிஸ்வர சீனி இறக்குமதியாளரின் நன்மைக்காக மாத்திரம் சீனி இறக்குமதிக்கு ஒரு கிலோவுக்கு ஐம்பது ரூபாவாக இருந்த இறக்குமதி வரியை இரவோடு இரவாக இருபத்தியைந்து சத வரியாக மாற்றி தனது கூட்டத்துக்கு இலாபம் தேடும் ஒரே குறிக்கோள் உடைய பெரிய கோதாவின் அதே கொள்கையை சிறிய கோதாவும் பொருளாதார திட்டமிடலில் பின்பற்றினால் பொதுமக்களுக்கோ இந்த நாட்டுக்கோ எந்தப் பிரயோகனமும் இல்லாத இந்த கேடு கெட்ட கூட்டத்தை மாற்ற பொதுமக்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
ReplyDelete