Header Ads



IMF நிபந்தனைகளை அடுத்து, புதிய வரிகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்


சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சொத்து வரி, பரிசு மற்றும் பரம்பரைச்சொத்து வரியை இலங்கை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


“குறிப்பாக, நாங்கள் நாடு தழுவிய உண்மையான சொத்து வரியை அறிமுகப்படுத்தவும், மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களுக்கு இடையிலான பரிமாற்ற முறையை சரிசெய்யவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.


வரி இல்லாத கொடுப்பனவு மற்றும் குறைந்தபட்ச விலக்குகளுடன் பரிசு மற்றும்  பரம்பரைச்சொத்து வரியும் அறிமுகப்படுத்தப்படும் என IMF திட்ட ஆவணங்கள் இந்த வாரம் பகிரங்கப்படுத்தியுள்ளன.


இந்த வரிச் சீர்திருத்தங்களுக்கான ஆயத்தப் பணிகள் 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் IMF தொழில்நுட்ப உதவியால் ஆரம்பிக்கப்படவுள்ளது.


2025 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 வீதமான முதன்மை நிதி உபரியை இலங்கை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், வரிசைப்படுத்தப்பட்ட வரி நடவடிக்கைகளின் தொகுப்பை அமுல்படுத்துவதன் மூலம் 2026 ஆம் ஆண்டளவில் இலங்கை வரி-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை குறைந்தபட்சம் 14 சதவீதமாக உயர்த்த வேண்டும்.





No comments

Powered by Blogger.