Header Ads



ஜனாதிபதி ரணிலும், IMF கடனுதவியும் - ஹிருணிக்காவின் நிலைப்பாடு இதுதான்


சர்வதேச நாணய நிதியத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதையிட்டு எதிர்க் கட்சிகள் மகிழ்ச்சியடையலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.


இந்தக் கடன் நிவாரணம் உண்மையில் கிடைக்கப்பெற்றதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எதிர்க்கட்சி என்ற வகையில் ஜனாதிபதி ஆற்றிய பணிகளுக்கு மதிப்பளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைத்த ஆதரவை எதிர்க்கட்சியாக நாங்கள் மதிக்கிறோம் என்றும் ரணில் விக்கிரமசிங்கவை தனி நபராக நம்பி சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பணம் கொடுத்ததாகவும் அவர் கூறினார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.