காதல் மன்றமானது பாராளுமன்றம் - "நாம கல்யாணம் பண்ணிக்கலாமா...? காதலை கூறிய Mp
ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினரான ஒருவர் காதலியான சக நாடாளுமன்ற உறுப்பினரை திருமணம் செய்து கொள்ள அழைப்பு விடுத்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு குறித்த காணொளி சமூகவலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நாதன் லாம்பர்ட், நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது யாருமே எதிர்பாராத வகையில், தனது காதலியான நாடாளுமன்ற உறுப்பினர் நோவா எர்லிச்சை பார்த்து, நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? என கேள்வி எழுப்பினார்.
தற்போது மோதிரம் கொண்டு வரவில்லை என்றும், பின்னிரவில் அதை தருவதாகவும் நாதன் லாம்பர்ட் அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் நாடாளுமன்றம், சிறிது நேரம் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் காணப்பட்டது.
மேலும், லாம்பர்டினுக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவரது காதலை ஏற்றுக் கொண்ட நோவா எர்லிச் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
Post a Comment