Header Ads



ECHO மூன்றாண்டு விழா: கல்வி இருந்தால் உலகில் எங்கு சென்றாலும் உரிய இடம் கிடைக்கும் Dr ரிஸ்னி சக்காப்


- Ismathul Rahuman -


கல்வி கற்ற நீங்கள் உங்கள் பெற்றோர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் என்றும் மறக்கவேண்டாம். கல்வி இருந்தால் உலகில் எங்கு சென்றாலும் உரிய இடம் கிடைக்கும் என விஷேட வைத்திய நிபுனர் வித்தியாநிதி ரிஸ்னி சக்காப் நீர்கொழும்பு, கல்வி கலாசார சகாய நிறுவனத்தின் (Education Culture Helper Organaization) மூன்று ஆண்டு நிறைவு விழாவும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு புலமைபரிசில் வழங்கும் நிகழ்வும்  19 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு அல் ஹிலால்  தேசிய கல்லூரி கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை அதிபர் எம்.எம்.எம். றிழுவான் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,


  பெற்றார்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பட்ட கஷ்டங்களை எண்ணிப் பார்க்க வேண்டும். அதேபோல் நீங்கள் இந்த நிலைக்கு வருவதற்கு காரணமாக இருந்த ஆசிரியர்களையும் மறக்க வேண்டாம். அவர்களை காணும்போது மட்டுமன்றி எந்த நேரமும் நினைவில் வைத்திருங்கள்.


 பெற்றார்களும், ஆசிரியர்களும் எமக்காக கஷ்டப்பட்டவர்கள். கல்வியை கற்பதுதான் உங்கள் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். உங்களுக்கு தகுதி இருந்தால் உலகில் எங்கு சென்றாலும் உரிய இடம் கிடைக்கும். அதனை நான் உயர் கல்விக்காக வெளிநாடு சென்றபோது அநுபவித்துள்ளேன். உரிய தகுதி இருந்தால் எவரினதும் சிபாரிசு தேவையில்லை. 


    பல்கலைக்கழகங்களில் விரிவுரைகளுக்குச் செல்லும் போது முன்னாயத்துடன் செல்லுங்கள். அப்போதுதான் விரிவுரையாளர்கள் கூறுவதை  புரிந்துகொள்ள முடியும். வாசிகசாலைகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். கல்விக்கு புறம்பாக விளையாட்டுக்கள் போன்ற மேலதிக நடவடிக்கைகளிலும் ஈடுபடுங்கள் எனக்கு கூறினார்.


     நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் அஷ் ஷேக் எம்.ஏ. சிறாஜ் அவர்களின் கிறாத் ஓதலுடன் ஆரம்பிக்கப்பட்டது. பிரதம அதியாக விஷேட வைத்திய நிபுனர்  வித்தியாநிதி ரிஸ்னி ஸக்காப் கலந்து சிறப்பித்ததுடன் கெளரவ அதிதியாக அல் ஹிலால் தேசிய பாடசாலை அதிபர் வித்தியா விஜயசிரி எம்.எஸ்.எம். சஹிர் கலந்துகொன்றார்.


   இவ்வைபவத்தின் போது இம்முறை நாட்டின் பல்வேறு பல்கலைக் கழகங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட பெரியமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த அல் ஹிலால் தேசிய பாடசாலை,வித்தியாலங்கார  மத்திய மகா வித்தியாலயம், நிவுஸ்டட் மகளிர் தேசிய பாடசாலை ஆகியவற்றின் 9 மாணவர்களுக்கு பிரதம அதிதி  விசேட வைத்திய நிபுனர் ரிஸ்னி சக்காப் அவர்களினால் மாதந்தம் வழங்கு புலமைபரிசில் நிதிஉதவி வழங்கப்பட்டன.


  இவ் வைபவத்தின் போது பதவி உயர் பெற்றவர்களான கிழக்கு மாகாண சிரேஷ்ட உதவி கணக்காய்வாளர்நாயகம் எம்.பி.ஐ.எம். றஸ்மி, பேராசிரியர் எம்.எச்.எப். சக்கீனா ஆகியோர்கள் நிணைவுச் சின்னம் வழங்கி பாராட்டப்பட்டனர்.


  உதவி செயலாளர் எஸ்.எம். சிறாஜ் வரவேற்புரை நிகழ்தி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.


 தலைவர் எம். எம்.எம். றிலுவான் தனது தலைமை உரையில்,


 கல்வியை கற்பவனாக இரு கல்வியை கற்பிப்பவனாக இரு கல்விற்கு உதவிசெய்பவனாக இரு நான்காமவனாக இருக்காதே என்ற நபிமொழியை சுட்டிக்காட்டி  ஆரம்பித்து எமது இந்த நிறுவனத்தில்  கல்வியை கற்பவர்கள் கல்வியை கற்பிப்பவர்கள் அதற்கு உதவிசெய்பவர்கள் அனைவரும் அடங்கியுள்ளனர்.


    அல் ஹிலாலின் நூற்றாண்டு விழாவில் உதித்த எண்ணக்கருவுக்கு இனங்க எமது கல்வி கலாசார  சகாய நிறுவனத்தை உறுவாக்கியதாகவும் 2020 ஆண்டு முதல் வருடத்தில் 4 மாணவர்களுக்கும்  2,3 வருடங்களில் தலா 7 பேர்களுமாக மொத்தம் 27 மாணவர்களுக்கு  நிதி உதவி செய்து வருகின்றோம். பல்கலைக்கழகங்களின் பல்வேறு துறைகளுக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள இவர்களுக்கு பாடநெறி முடியும் வரை இந்த நிதி உதவியை மாதாந்தம் வழங்கிவருவதாகக் கூறினார்.


      "எக்கோ" (ECHO) நிறுவனத்தின் மூன்றாண்டு நினைவு  மலரையும் பிரதம அதிதி வெளியிட்டு வைத்தார். 


நிறுவன தலைவர்  எம்.எம்.எம். றிழுவான் பிரதம அதிதிக்கு நிணைவுச் சின்னத்தை வழங்க பிரதி தலைவர் எம்.ஆர்.எம். ரொஷான் கெளரவ அதிதிக்கு நிணைவுச் சின்னத்தை வழங்கினார். கெளரவ அதிதி அதிபர் எம்.எஸ்.எம். சஹிர்,நிறுவன செயலாளர் எம்.எச்.எம். பாசில் ஆகியோர்களும் உரையாற்றினர்.





No comments

Powered by Blogger.