உலகப் பணக்காரனுக்கு சவாலாக ‘Blue sky’
ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய நிலையில், ட்விட்டரின் முன்னாள் CEO-வான ஜாக் டோர்சி ட்விட்டருக்குப் போட்டியாக சமூகவலைதளச் செயலி ஒன்றை அறிமுகப்படுத்துவேன் என்று அறிவித்திருந்தார். அதன்படி ‘Bluesky’ என்ற செயலியைத் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் நீல நிற லோகோவை போலவே இந்தச் செயலியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை முயற்சியாக ஆப்பிள் இயங்குதளத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த செயலி விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
பிப்ரவரி 17-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செயலியை இதுவரை கிட்டத்தட்ட 2,000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். ட்விட்டருக்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட இந்த ‘Bluesky’ செயலியில் பணியாற்றியவர்களில் பெரும்பாலானோர் ட்விட்டரின் முன்னாள் ஊழியர்கள் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாகக் கடந்த ஆண்டு ட்விட்டரில் பதிவிட்ட ஜாக் டோர்சி, “‘Bluesky’ செயலி, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் நபர்களின் தரவுகளைச் சொந்தமாக்க முயற்சி செய்யும் எந்தவொரு நிறுவனத்திற்கும் ஒரு மாற்றாக இருக்க விரும்புகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
Post a Comment