Header Ads



இது என்னவென்று தெரியுமா..?


ஹப்பிள் தொலைநோக்கி, நமக்காக பிடித்தனுப்பிய பிரமிக்க வைக்கும், பிரபஞ்ச வெளியின் புகைப்படம்தான் இது. 


இதிலே தென்படும் ஒவ்வொரு ஒளிரும் புள்ளியும் தனித்தனியான பால்வெளி அண்டங்கள். ஒவ்வொன்றிலும்100 பில்லியனுக்கும் அதிகமான நட்சத்திர மண்டலங்களும் அந்த நட்சத்திர மண்டலங்களுக்குள் பில்லியன் கணக்கான  கோல்மண்டலங்களும் உள்ளன.


சுமார் 120,000 ஒளியாண்டுகள் பரப்பளவுள்ள பரந்து விரிந்த நமது பால்வெளியானது இத்தகைய பிரமாண்டமான பிரபஞ்ச வெளியில் ஒரு தூசி  போன்றும் தென்படுவதில்லை. 


இந்த தூசித் துளியில் நாமும் நமது பூமி, நமது சூரிய குடும்பமும் எல்லாம் அற்பமான அணுக்களாக, தூகள்காவே காட்சியளிக்கும். 


இதையெல்லாம் விட பேரதிர்ச்சியான விடயமும், மெய் சிலிர்க்க வைக்கும் தகவலும் யாதெனில் இந்தப் புகைப்படம் நம் காட்சிக்குட்பட்ட (الكون المرصود) பேரண்டத்தில் ஒரு சிறு பகுதி மாத்திரமே என்பதாகும். 


தட்டுத்தட்டாக படைக்கப்பட்ட ஏழு ஆகாயங்களும் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஏழு ஆகாயங்களையும் தன்னகத்துள் அடக்கி வைத்திருக்கும் (குர்ஸி) என்ன பரலோகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆற்றல் மிகு அர்சின் ரஹ்மான் எப்படிப்பட்டவன் என்று கற்பனை செய்து பாருங்கள்!


((அல்லாஹ்வை அவர்கள் மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை; மேலும் மறுமை நாளில் போது இந்த பூமி முழுதும் அவனுடைய கைப்பிடியில் இருக்கும்; அத்தோடு பேரண்டங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டிருக்கும்; அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் மகா தூயவன்.)) 📖 அல்குர்ஆன் : 39:67


✍ தமிழாக்கம் / Imran Farook

1 comment:

  1. சூரதுல் பாதிஹாவின் முதல்வசனமான அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்ற வசனத்தின் அர்த்தத்தை இன்னும் பலஆயிரம் வருடங்கள் சென்றாலும் மனித சமூகத்தால் விளங்கிக் கொள்ள முடியாது. அதில் வரும் ஆலமீன் என்ற பதத்தின் மிகவும் அற்பமான விளக்கம் தான் மேலே வருகின்றது. இந்த பிரபஞ்சத்தில் சூரிய குடும்பம் எங்கே இருக்கின்றது என இதுவரை எந்த விஞ்ஞானியாலும் சரியாக அடையாளப்படுத்த முடியவில்லை. வெறுமனே இந்த பகுதியில் இருக்கலாம் எனக்கூறும் மனித இனம் இன்னும் அல்லாஹ்வுடைய பிரபாண்டான பிரபஞ்சத்தை விளங்க இன்னும் எவ்வளவு காலம் செல்லும் என்பதுவும் தெரியாது. அல்ஹம்துலில்லாஹ், யா அல்லாஹ் உனக்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.