Header Ads



இங்கிலாந்தில் இலங்கை முஸ்லிம் அடுத்த தலைமுறைக்கான நிகழ்வு


இங்கிலாந்து லெஸ்டர் மாநகரில் இன்று சனிக்கிழமை (11/03/2023) இலங்கை முஸ்லிம்  அடுத்த தலைமுறை இளைஞர் , யுவதி, இளம்வயதினருக்கான நிகழ்வொன்று Judgemeadow Community College கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

லெஸ்டர் மாநகரில் இயங்கும் இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் ஒத்துழைப்போடு SLMS-UK (SriLanka Muslim Society) அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் சுமார் என்பது இளையோர் கலந்து சிறப்பித்திருந்தனர். 


இன்றைய சமகால சவால்களோடு மார்க்க விழுமியங்களை எவ்வாறு கடைப்பிடிப்பது , அன்றாட வாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்வினைகளில் இருந்து எவ்வாறு தம்மை பாதுகாத்துக் கொள்வது மற்றும் சமூகத்தின் பாலுள்ள கடமைகள் என்பன பற்றி உதாரணங்களுடன்  உணர்த்தப்பட்டது. 


கருத்தரங்காக மட்டுமல்லாது காத்திரமிக்க கருத்தாடல் களமாக அமைந்திருந்ததோடு கவரும் விதமாகவும் இருந்தது.


ஆங்கில மொழி மூலமான இந்நிகழ்வு இளைஞர்களாலேயே தொகுத்து வழங்கப்பட்டிருந்ததும் ,ஏற்பாடுகளில் பாரிய பங்கெடுத்திருந்ததும் சிறப்புமிக்க கண்கவர் அம்சமாகும். இளைஞர் விவகாரங்களில் பரீட்சயம் பெற்ற வல்லுனர்களான மஸ்ஹர் கான் மற்றும் ஆபித் ஷாஹ் வழிகாட்டிகளாக கலந்து தமக்கான குறிப்பிட்ட நேரங்களில் தேவையான விடயங்களை பகிர்ந்து கொண்டதுடன் அனைவரினதும் பொறுப்புகளையும்  உணரச்செய்தனர்.


காலை 11:00 மணிமுதல் மாலை 4:00 மணிவரை மதிய போஷனத்துடன் இடம்பெற்ற நிகழ்வின் இறுதி தகவலாக பல தியாகங்களுக்கும் ,அர்ப்பணிப்புகளுக்கும் மத்தியில் பெற்றோர்கள் அடுத்த தலைமுறையினரான உங்களின் நலன்களிலேயே அதீத சிரத்தையுடன் செயல்படுவதால் உங்கள் மீதான பொறுப்புகளை உணர்ந்து கொள்ளுமாறு வினவப்பட்டு நிறைவான நிகழ்வாக நிகழ்த்தித் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்தி நிறைவுற்றது.


SLMS-UK




No comments

Powered by Blogger.