சாம் சங் நிறுவனம் அமைக்கிறது செமி கண்டக்டர் ஆலை
சாம்சங் நிறுவனம் தென் கொரியாவில் இந்திய ரூ.17 லட்சம் கோடியில் செமி கண்டக்டர் ஆலை அமைக்க உள்ளது. தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு சாம்சங் நிறுவனம் செயல்படுகிறது.
எலெக்ட்ரானிக் பொருள்கள் உற்பத்தியில் உலகின் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனம் சியோல் அருகே மிக பெரிய செமி கண்டக்டர் ஆலையை அமைக்கவிருக்கிறது.
இந்த திட்டத்துக்கு இந்திய ரூ.17 லட்சம் கோடியை சாம்சங் செலவிட உள்ளது. இதில் இந்நிறுவனத்தின் 5 புதிய ஆலைகள் அமைக்கப்படும். வரும் 2042ம் ஆண்டுக்குள் இவை செயல்பட துவங்கும்.புதிய ஆலைக்கு அருகே செமி கண்டக்டர் கருவிகள் மற்றும் இதர பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் துவங்க வாய்ப்பு உள்ளன.
Post a Comment