மனைவியுடன் தகராறு, கணவன் செய்த மோசமான செயல்
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் ஒன்று மொரட்டுவையில் பதிவாகியுள்ளது.
மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொடசிறி மாவத்தை கடலான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றபோது, கணவன் வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானதுடன், பாடசாலை செல்லும் இருவரது புத்தகங்களும் தீயில் கருகின.
Post a Comment