Header Ads



மறுசீரமைப்புக்குள்ளாகும் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு - உங்கள் ஆலேசனைகளையும் சமர்ப்பிக்கலாம்


- Ismathul Rahuman -


இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகளை அரச மட்டத்தில் கலந்துரையாடி தீர்வுகளை பெறும் நோக்கில் 1964 இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆரம்பத் தலைவர் ஷாபி மரிக்கார் காலத்தில் பல கல்வி பணிகள் மேற்கொள்ளப்பட்டதை நாம் அறிவோம். அவரின் மறைவை தொடர்ந்து பேராசிரியர் இஸ்மாயில் மற்றும் பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ் ஆகியோர்களின் தலைமையில் பல காத்திரமான கல்விப்பணிகளை மேற்கொண்டது.


பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில் காலஞ்சென்றதைத் தொடர்ந்து பேராசிரியர் அனஸ் அவர்களும் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட் 19 அனர்த்தம், பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் கல்வி மாநாட்டின் நடவடிக்கைகளில தொய்வுநிலை ஏற்பட்டதை அறிவோம்.


சமூகம் வேண்டி நிற்கும் பல கல்விப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில் கலந்துரையாடிய நிர்வாக உறுப்பினர்கள் முஸ்லிம் கல்வி மாநாட்டை மறுசீரமைப்பதற்கான ஒரு குழுவை நியமித்துள்ளனர் . ஓய்வு பெற்ற அதிபர் எம். எம். .எம். ரிழுவான் அவர்களுடைய தலைமையில்  நியமிக்கப்பட்ட இக்குழுவில் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரசீத் எம் இம்தியாஸ். உபதலைவர் மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் ஓய்வுபெற்ற அதிபர் எம். ஐ. எஸ். ஹமீத், கே. எம். ஏ. ஹஸன், எம். ஏ. எம் நுஸ்கி, ஏ. அபூஉபைதா எம். எச். எம். ஹஸன் ஆகிய நிர்வாக உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.


கல்வியாளர்கள், துறை சார்ந்தவர்கள், கல்வியில் ஆர்வம் கொண்டவர்கள், கல்வித்துறை உயர் உத்தியோகத்தர்கள் போன்றோரை அழைத்து ஒரு பேராளர் மகாநாட்டை கூட்டி புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யும் நோக்கில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ரமழானின் பின்னர் இன்ஷா அல்லாஹ் இக்கூட்டம் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் இக்கூட்டத்தில் இணைந்து கொள்ள இதன் இணைப்பாளர் ஒய்வு பெற்ற அதிபர் எம்.எம்.எம். எம் ரிழ்வான் அவர்களுடன் தொலைபேசியூடாக அல்லது WhatsApp ஊடாக தொடர்பு கொள்ளவும். அவரின் தொலைபேசி இலக்கம் 0778787172.

No comments

Powered by Blogger.