Header Ads



சிறுவர்களிடையே இன்புளுவன்சா - எச்சரிக்கையுடன் செயற்பட அறிவுறுத்தல்


நாட்டில் தற்போது சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சா மற்றும் அதற்கு சமமான வைரஸ் நோய்கள் அதிகரித்து வருவதாக, சிறுவர் நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.


அவ்வாறான அறிகுறிகள் தென்பட்டாலும், தொடர்ந்து மூன்று தினங்களுக்கு காய்ச்சல் நீடித்தாலும் உடனடியாக சிகிச்சையை பெற்றுக்கொள்ளுமாறும் பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


குறைந்த வயதுடைய சிறுவர்களுக்கே இந்த நோய் அதிகமாக பரவும் அபாயம் காணப்படுவதால், பெற்றோர் இது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,


அண்மைக்காலமாக சிறுவர்கள் மத்தியில் வைரஸ் நோய் பரவி வருகின்றது.


நோய் அறிகுறிகளாக இருமல், சளி, வாந்தி மற்றும் கண்களில் சிதிலம் வெளிவருதல் உட்பட மற்றும் சில சிறார்களுக்கு வயிற்றுப் போக்கும் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அவ்வாறான சிறுவர்களை பரிசோதனைக்குட்படுத்தியபோது, சில சிறுவர்களுக்கு இன்புளுவன்சா நோய் பொசிட்டிவ்வாக காணப்பட்டது. மேலும் சிலருக்குநெகட்டிவ்வாகவும் காணப்பட்டது.


எனினும் இக்காலங்களில் சிறுவர்களுக்கு காய்ச்சல் ஏற்படுமானால் இருமல், சளி, உள்ளிட்ட அறிகுறிகளோடுஇன்புளுவென்சா தொற்றலாம். குறிப்பிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுமானால், அவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை, சிறுவர் பராமரிப்பு நிலையம் மற்றும் மொன்டிசொரிக்கு அனுப்புவதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் பெற்றோர்களை அறிவுறுத்தியுள்ளார்.


(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments

Powered by Blogger.