Header Ads



திடீரென உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி, காரணம் வெளியானது


பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டில் உயிரிழந்த மாணவி மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


குருநாகல் பகுதியைச் சேர்ந்த வினோதி சில்வா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இவர் அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


குறித்த மாணவி சில காலமாக மன உளைச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.


பேராதனை பல்கலைக்கழகத்தின் மலசேகர விடுதியில் குறித்த மாணவி சுகவீனமடைந்த நிலையில் பல்கலைக்கழக மருத்துவ சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர்,  பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்ததாக பேராதனைப் பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.