விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்துக்களால் நாம் பல அகால மரணங்களை கேட்டும் பார்த்தும் வருகிறோம்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இதேபோன்றதொரு விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ரவிந்து சஹான் என்ற 25 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை ரயில் பாதைக்கு அருகில் தொலைபேசியில் பேசிக்கொண்டு காத்திருந்த ரவிந்து எதிர்பாராத நேரத்தில் ரயிலில் அடிபட்டார்.
திருமணமான ரவிந்துவின் அகால மரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகளவில் செய்திகள் பகிரப்பட்டு வருவதை நாம் அறிவோம்.
களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்த ரவிந்துவின் இறுதிக் கிரியைகள் நாளை (20) கொஹுவல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளன.
ரவிந்து கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.
Post a Comment