Header Ads



தலைநகரை மாற்றும் இந்தோனேஷியா


அதிகரிக்கும் மக்கள்தொகை, காலநிலை மாற்றம், காற்று மாசுபாடு, தொடர் பூகம்பங்கள், ஜகார்த்தா தீவு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளிட்ட காரணங்களால் இந்தோனேஷிய தலைநகர் போர்னியா தீவுக்கு மாற்றப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் இந்திய பெருங்கடலும், பசிபிக் கடல்களும் இணையும் இடத்தில் உள்ள இந்தோனேஷியா பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய நாடாகும். 


இதில் மொத்தம் 17 ஆயிரம் தீவுகள் அடங்கியுள்ளன. தற்போது இதன் தலைநகராக ஜாவா தீவிலுள்ள கடலோர நகரமான ஜகார்த்தா உள்ளது. இந்தோனேஷிய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஜாவா தீவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், உலகிலேயே மிக வேகமாக கடலில் மூழ்கி கொண்டுள்ள நகரமாக இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தா இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் தொகை அதிகரிப்பால் நெரிசலான நகரம், வாகன பெருக்கம், அதனால் காற்றுமாசு அதிகரிப்பு, கடலில் மூழ்கும் அபாயம் உள்ளிட்ட காரணங்களால் தலைநகரை மாற்ற முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, தலைநகரை போர்னியா தீவின் நுசாந்தராவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டே அதற்கான அனுமதியும் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டது. விரைவில் போர்னியா தீவின் நுசாந்தராவில் தலைநகரம் நிர்மாணிக்கப்படும் என அதிபர் ஜோகோ விடாடோ அறிவித்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தலைநகர் மாற்றத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.


No comments

Powered by Blogger.