Header Ads



உள்ளூராட்சிகளின் பதவிக்காலம் நாளை முடிவடைகிறது, திருட்டு பாதையில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை


 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் நாளை (19) நள்ளிரவுடன் முடிவடைகிறது. 


இதனிடையே, உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை நீடிக்க திட்டமிடப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் J.C. அலவத்துவல குற்றஞ்சாட்டியுள்ளார். 


இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை கூறினார். 


அரசியலமைப்பின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை நீடிக்க அமைச்சருக்கு அதிகாரமில்லை எனவும் அவர் தெரிவித்தார். 


இதனால் திருட்டுத்தனமான பாதையில் மீண்டும் செல்ல தயாராக வேண்டாம் என அரசாங்கத்திற்கு  ஜே.சி. அலவத்துவல அறிவுறுத்தினார். 


தமது தலைவர்களையும் உறுப்பினர்களையும் தொடர்ந்தும் பதவியில் வைத்திருக்க பொதுஜன பெரமுன கூட்டணி தயாராகுமானால், எதிர்க்கட்சி அதற்கு கடுமையான எதிர்ப்பை வௌிப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.