சிறைக் கைதி சுட்டுக் கொலை
கேகாலை தடுப்புச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச் செல்ல முயன்ற நிலையில், அவர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கேகாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குடும்ப பராமரிப்பு செலவை வழங்காமை தொடர்பில் குறித்த கைதி தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (08) அதிகாலையில் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த கைதியை குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மல்சிறிபுர, திவுல்கட பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனவும், குருணாகல் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் வழக்கு தொடர்பில் குறித்த நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Post a Comment