Header Ads



ஜனாதிபதி தேர்தலை நடத்திய பின், ஏனைய தேர்தல்களை நடத்த ரணில் முயற்சி


 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்திய பின்னரே ஏனைய தேர்தல்களை நடத்துவதற்கு ஜனாதிபதி முயற்சித்து வருவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


நேற்றைய தினம் (19.03.2023) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஒத்திவைக்கப்படுகின்ற தேர்தல் தொடர்பாகக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர் கூறியதாவது, 


ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்களை கொண்டு சபைகளை நடத்துவதற்குப் பொதுஜன பெரமுன முயற்சிக்கிறது. இது சட்டவிரோதமானது.


உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் போது தவிசாளர்களின் பதவிகளும் இழக்கப்படும். அவ்வாறு பதவிகளை இழந்த பின்னர் தவிசாளர்களை கொண்டு சபைகளை இயக்க முடியாது.


தேர்தல்கள் தேவையில்லை என்றும் சபைகளின் தவிசாளர்கள் தொடர்ந்து செயற்படலாம் எனனவும் பொதுஜன பெரமுன குறிப்பிடுவது ஜனநாயக விரோதமான செயற்பாடு எனத் தெரிவித்துள்ள அவர், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்திய பின்னரே ஏனைய தேர்தல்களை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.