Header Ads



பெருந்தொகை டொலரை நன்கொடையாக வழங்கிய ஜப்பான்


இலங்கையில் அபாய நிலையில் வாழும் சிறார்களுக்கு உதவுவதற்காக ஜப்பான் அரசாங்கம் 1.8 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது.


UNICEF நிறுவனத்திடம் ஜப்பான் அரசாங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.


இதனூடாக 6 இலட்சத்திற்கும் அதிகமான சிறார்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர், சுகாதார மேம்பாட்டை வழங்கவும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையில், மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக UNICEF நிறுவனம் அறிவித்துள்ளது.


கடந்த வருடம் ஆரம்பமான பொருளாதார நெருக்கடியின் முதற்கட்டத்திலிருந்து, இதுவரை 3.8 மில்லியன் டொலருக்கும் அதிகமான நன்கொடைகளை  ஜப்பான் அரசாங்கம் UNICEF ஊடாக இலங்கைக்கு வழங்கியுள்ளது.

No comments

Powered by Blogger.