Header Ads



இன்று புதன்கிழமை தலைப்பிறை பாருங்கள்


ஹிஜ்ரி 1444 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்ப்பதற்கான மாநாடு இன்று  புதன்கிழமை, 22 ஆம் திகதி மஹ்ரிபு தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் கேட்போர் கூடத்தில் இடம்பெற இருக்கின்றது.


கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற இருக்கும் பிறை  பார்க்கும் மாநாட்டில்,


 கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு உறுப்பினர்கள் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் Z.A.M.பைஸல் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் அகில இலங்கை ஜம்யியதுல் உலமா சபையின் பிரதிநிதிகள் வளிமண்டல திணைக்கள அதிகாரிகள் ஏனைய பள்ளிவாசல்கள் தரீக்காக்கள் ஸாவியாக்களின்  நம்பிக்கையாளர்கள் மேமன் சங்க உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

All reactions:

1 comment:

  1. முஸ்லிம் கலாசாரத் திணைக்களம் அல்லது பிறைக்குழு முதன் முதலாக மிக முக்கியமான பணியைச் செய்ய வேண்டும். இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு மக்ரிப் தொழுகை முடிய எல்லோரும் அவரவர்களுடைய கிராமத்தில் அல்லது பிரதேசங்களில் பிறை பார்க்குமாறும் பிறை தென்பட்டால் என்ன அடுத்த கட்டம் அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும் பொதுமக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு அறிவிக்க வேண்டும். அவ்வாறு முஸ்லிம்கள் பிறைபார்ப்பது பர்ளு கிபாயா என்ற சட்டத்துக்கு உற்படும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் உள்ள கடமையாகும் என்பதை யாராவது ஒரு மௌலவி கூறியிருக்கின்றார்களா? ஆனால் முஸ்லிம் நாடுகளில் அது சரியாகப் பின்பற்றப்படுகின்றது. இந்த நாட்டில் பெரிய பள்ளிவாயலின் மாநாட்டு மண்டபத்துக்கு டை கோட் போட்டவர்கள் இருந்து கொண்டால் அத்தனையும் மேசைக்கு வரும் என்ற இறுமாப்பா. ஷரீஆச் சட்டம் தெரிந்தவர்கள் உரியவர்களை வழிகாட்ட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.