இந்த ஆண்டு தேர்தலை, நடத்தவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை.
இந்த ஆண்டு தேர்தலை நடத்தவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலும், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் நாடாளுமன்றமே முடிவெடுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தேர்தலுக்காக ஒதுக்கிய நிதியை விடுவிக்கப்படுவதற்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை வழங்கியுள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்தக் கருத்தும் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் பிரதிநிதிகள் உள்ள அதியுயர் சபையே நாடாளுமன்றம். எனவே, நாடாளுமன்றத்தின் தீர்மானங்களை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது எனவும், நாடாளுமன்றத்துக்குச் சவால் விடுத்து எவரும் செயற்பட முடியாது எனவும் மீளவும் தெரிவிக்க விரும்புகின்றேன்.
தேர்தல்கள் ஆணைக்குழு முதலில் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும். அதில் உள்ளவர்கள் இருவேறு திசைகளில் பயணிக்கின்றனர்.
அவர்களுக்கிடையில் ஒருமித்த நிலைப்பாடு இல்லை. இந்த வருடம் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை. நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்தில்கொண்டு தேர்தலை எப்போது நடத்துவது என்று நாடாளுமன்றம் முடிவெடுக்கும் என குறிப்பிட்டார். Tamilw
Post a Comment