ஸ்பெயின் நாட்டு முஸ்லிம் மன்னர், தனது காதல் மனைவிக்கு எழுதிய உருக்கமான கவிதை
அல் முதாமித் இப்னு அப்பாத்- AL-MU'TAMID IBN ABBAD - (கி.பி.1040-கி.பி.1095) அந்தலூசியாவின் செவில்லே (SEVILLE) பிராந்தியத்தின் கலீபாவாக (1069-1091) வரை ஆட்சி செய்தவர். ‘கொர்டோபா’ அதன் தலைநகரமாக இருந்தது.
ஆனால் CASTILE பிராந்திய கிறிஸ்தவ அரசன் ‘அல்பொன்சொ IV’ ற்கு அவனின் அத்துமீறலை தடுக்க கப்பம் செழுத்தி வந்தார். இதனால் ‘செவில்லே’ இன் திறைசேரி காலியாகவே அல் முதாமித் கப்பம் செழுத்த மறுத்தார்.
அல்பொன்சோவுடன் சண்டை செய்ய மொரொக்கொவில் ALMORAVIDS களின் ஆட்சியாளராக இருந்த YUSUF IBN TASHFIN இடம் உதவிகோரினார். அவர்கள் மகிழ்ச்சியோடு உதவ முன்வந்தார்கள். 1086இல் SAGRAJAS சண்டையில் அல்பொன்சோ IV தோற்கடிக்கப்பட்டார்.
ஸ்பெய்னின் எல்லா இஸ்லாமிய பிராந்தியங்களையும் அவர்களின் ஆட்சியின்கீழ் கொண்டுவரத் துணிந்தார்கள். உதவிக்காக அழைத்த ALMORAVIDS களிடம் தன் மனைவி மக்களை தவிர அனைத்தையும் இழந்து ‘அல் முதாமித்’ ற்கு சரணடையும் நிலை உருவானது.
கி.பி.1091 இல் அல் முதாமித் ALMORAVIDS களினால் வட ஆபிரிக்கா,மொரொக்கோ ற்கு நாடு கடத்தப்பட்டு அஹ்மட் – AGHMAT- பகுதியில் சிறை வைக்கப்பட்டார். அவரின் மகள்கள்,இளவரசிகள் பருத்தி ஆலை ஒன்றில் நூல் நெய்தார்கள்.அந்நாளில் மிகச்சிறந்த அரபுக்கவிஞ்ஞனான அல் முதாமித், அரபியில் எழுதிய கவிதைகளில் சிலதை DULCIE LAWRENCE SMITH ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து ‘POEMS OF MUTAMID,KING OF SEVILLE’ என்ற பெயரில் 1915 வெளியிட்டார்.
முடி பறிக்கப்பட்ட முதாமித் கைதியாக நோன்புப்பெருநாள் தினமொன்றில் அவர் உயிர்போல நேசிக்கும் காதலி,மனைவி ETEMAD AL RUMAIKIYYAH ற்கு எழுதிய கவிதையை தமிழ் வடிவத்தில் தந்திருக்கின்றேன். MUTAMID எனும் பெயர் கலிபா MOHAMMAD IBN ABBAD தன் மனைவி மீது கொண்ட காதலிற்காக மக்கள் சூட்டிய பெயராகும்.
உன்னை மகிழ்வித்த பெருநாள் தினங்கள் போய்விட்டன.
ஆனால் ‘அஹ்மட்’ – AGHMAT- இல் உன்னை கைதியாக காணும் பண்டிகை சோகமானது.
உனது மகள்கள் கந்தலான ஆடைகளை உடுத்தியிருப்பதையும் பசியால் வாடுவதையும் காண்கிறாய்.
அவர்கள் சொற்ப கூலிற்கு சுழற்றுகிறார்கள்.
ஏனென்றால் அவர்கள் ஆதரவற்றவர்கள்.
அவர்கள் சோர்வுடன் நிலத்தைப்பார்த்த கண்களுடன் உன்னைத் தழுவ வருகிறார்கள்.
அவர்கள் தெருக்களின் சேற்றில் வெறுங்காலுடன் நடக்கின்றார்கள்.
அவர்கள் ஒரு காலத்தில் கஸ்தூரி மற்றும் சந்தனத்தை மிதித்தவர்கள்.
இப்போது அவர்களின் கன்னங்கள் குழிவீழ்ந்து, கண்ணீரால் சுருங்கி, அவர்களின் வறுமைக்கு சான்றளிக்கிறது.
நீங்கள் இந்த சோகமான பண்டிகையைப்போல இன்னொன்றை பார்க்காமல் இருக்க இறைவன் அருள் புரிவாராக!
நீங்கள் நோன்பு திறக்கின்றபோது உன் இதயம் உடைகின்றது.
உங்களின் நீண்டு அடக்கிய துக்கம் எரிமலையாய் வெடிக்கின்றது.
நேற்று, உங்களின் வார்த்தைக்கு எல்லா மனிதர்களும் கீழ்ப்படிந்தார்கள்;
இப்போது நீங்கள் மற்றவர்களின் தயவில் இருக்கிறீர்கள்.
“கீர்த்தியினால் பெருமை கொள்ளும் அரசர்கள் வீண் கனவின் போலிகள்!”
AKBAR RAFEEK
Post a Comment