Header Ads



ஸஹர், இப்தார் படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றாதீர்கள்


வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் ஸஹர் இஃப்தார் செய்வதில் சிரமங்களை எதிர் கொள்கிறார்கள்.


ரமழான் நோன்பு, முஸ்லிம்கள் பகலில் பசித்திருந்து பின்னர் உண்டு களிக்கும் மாதம் எனும் மனப்பதிவை அடுத்தவர்களிடம் ஏற்படுத்தும்.


குறிப்பாக நம் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரண பொருளாதார நெருக்கடி நிலையில் கஷ்ட நஷ்டங்களுக்கு மத்தியில் அதிகமான மக்கள் ரமழான் மாதத்தை எதிர் கொள்கிறார்கள்.


நோன்பாளிகளாக பலரும் விதவிதமான ஆகாரங்கள் பானங்களை காண்பது அவற்றின் மீதான ஆசையை ஏற்படுத்தலாம்.


நோன்பு அல்லாத காலங்களிலும் நாம் உண்பவற்றை பருகுபவற்றை காட்சிப்படுத்துவது அநாகரீகமான செயலாகும்.


நாம் வீட்டில் சமைப்பவற்றின் வாடை அண்டை அயலவருக்கு வீசுமென்றால் கூட பகிர்ந்துண்ண ஊக்குவிக்கும் சன்மார்க்கம் இஸ்லாம்.


ஆக, இவ்வாறு பிறர் பார்க்க காட்சிப் படுத்துவதும் அத்தகைய ஒரு செயல் தான்.


விளம்பர பரோபகாரங்கள், இஃப்தார்கள் பயனாளிகளின் சுய கெளரவத்தை பாதிக்கவும் இடமிருக்கிறது.


அவ்வாறு பதிவேற்றம் செய்பவர்களுக்கு லைக் காமன்ட் செய்து ஊக்குவிப்பதை தவிர்த்து இந்த செய்தியை எத்தி வைப்போம்! 

ரமழான் முபாரக்!

🤍

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்


No comments

Powered by Blogger.