தேர்தல்கள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை
2021 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட அறிக்கைகளை, 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கத் தவறினால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருதப்படும் உரிமை இரத்து செய்யப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமது கணக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதுவரை 2021 ஆம் ஆண்டிற்கான கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் நேற்று முதல் 14 நாட்களுக்குள் அதைச் சமர்ப்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் நேற்று கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment