தன்னை இயேசு என்றவரை சிலுவையில் அறைவதாக கூறியுள்ள மக்கள்
கென்யாவில் தன்னை இயேசு என்று கூறிக்கொண்டிருந்த நபரை சிலுவையில் அறையப்பபோவதாக மக்கள் கூறியதால், குறித்த நபர் பயத்தில் காப்பாற்ற கதறியுள்ளார்.
கென்யாவின் புங்கோமா மாகாணத்தில் உள்ள டோங்கரேன் பகுதியைச் சேர்ந்தவர் எலியுட் சிமியு. இவர் தன்னை இயேசு என்று கூறியதோடு, தனக்கு சீடர்களாக சில நபர்களையும் அழைத்துக் கொண்டு மதப் பிரச்சாரம் செய்துள்ளார்.
எலியுட் என்ற தன் பெயருக்குப் பதிலாக தன்னை டோங்கரேன் இயேசு என்று அறிவித்துக்கொண்டிருக்கிறார். இவ்வாறு தன்னை இயேசு என்று கூறிக்கொண்டிருக்கும் இவரை மக்கள் ஈஸ்டர் தினத்தன்று சிலுவையில் அறையப்போவதாக கூறியுள்ளனர்.
ஆம் சிலுவையில் அறைந்தால், இவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்துவிடுவார் என்றும், ஏனெனில் இவர் தன்னை இயேசு என்று கூறியதால், அவ்வாறு சோதித்து பார்ப்போம் என்று முடிவெடுத்துள்ளனர்.
இதனை அறிந்த எலியுட் என்னைக் காப்பாற்றுங்கள் என்று காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்திருக்கிறார்.
பிரான்சிஸ் மற்றும் சிசிலியா சிமியு என்ற தம்பதிகளுக்கு 1981ம் ஆண்டு ஆண்டு பிறந்தவர் தான் இந்த எலியுட். இவரது பெற்றோர் சிறுவயதிலேயே இறந்துவிட்டதால், இவர் கத்தோலிக்கராக வளர்ந்து வந்துள்ளார்.
கடந்த 2001ஆம் ஆண்டு இவரது 20 வயதில் இவருக்குத் திருமணம் நடந்த நிலையில், இவருக்கு எட்டு குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் கியாம்பு மாகாணத்தில் உள்ள ஒரு தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வருகிறார்.
2009ம் ஆண்டில் நடந்த குடும்ப தகராறில் சிமியுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருததுவமனை சிகிச்சைக்கு பின்பு இவ்வாறு மாறிவிட்டதாக கூறப்படுகின்றது.
ஆனால் எலியுட் வெறும் தண்ணீரை ஏராளமான தேநீராக மாற்றினார் என்றும் அதனை கிராம மக்கள் அனைவரும் ருசித்து பார்த்தனர் என்றும் தற்போது எனது கணவர் இயேசு என்று கூறியதால், கிராமத்திலிருந்து தங்களை ஒதுக்கி வைத்துள்ளதாக அப்பெண் கூறியுள்ளார்.
Post a Comment