அரச அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றில் மனு
திட்டமிடப்பட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்காமல் அதற்கு தடையை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த அரச நிறுவனங்களின் அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் உடன் விசாரணை நடத்துமாறு கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாற்று கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 9 ஆம் திகதி நடத்த திட்டமிட்டிருந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்காது அதனை சீர்குலைக்க நடவடிக்கை எடுத்த அரச அச்சகமா அதிபர், திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்த போதும், வாக்குச்சீட்டு அச்சிடப்படாமை, அதற்கான நிதி ஒதுக்கப்படாமை உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment