Header Ads



கபூரிய்யா விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் தலையிட வேண்டும் - பாராளுமன்றத்தில் கோரிக்கை


மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரி எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில்  நிதியமைச்சு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


மஹரகம கபூரிய்யா அரபுக்கல்லூரி இந்நாட்டில் இருக்கும் அரபுக்கல்லூரிகளில் 90 வருடங்களுக்கும் அதிக பழைமைவாய்ந்த முன்னணியில் உள்ள கல்லூரியாகும்.


சுமார் 17 ஏக்கர் நிலப்பரப்பைக்கொண்ட இந்த கல்லூரி அண்மைக்காலமாக மிகவும் கவலைக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த கல்லூரி என்.டீ.எச். அப்துல் கபூர் ஹாஜியார் என்ற தனவந்தரால், ஏழை மாணவர்கள் கல்வியைப் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் வழங்கப்பட்டதாகும். கபூரிய்யா அரபுக்கல்லூரிக்கு வருமானம் கிடைக்கும் வகையில், கொழும்பு கிரேண்பாஸில் சுலைமான் வைத்தியசாலை அமைக்கப்பட்டது.


என்றாலும் தற்போது அந்த வைத்தியசாலை இல்லை. அந்த இடம் ஆயிரத்தி 180 மில்லியன் ரூபாவுக்கு 20 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.


என்றாலும் இந்த பணம் கபூரிய்யா அரபுக்கல்லூரிக்கு செலவிடப்படாமல், என்.டீ.எச். அப்துல் கபூர் ஹாஜியாரின் மூன்று பரம்பரையினர் இந்த கல்லூரியின் விடயத்தில் முறையாக செயற்பட்டு வந்தபோதும் தற்போது 4ஆவது பரம்பரையில் வந்த ஒருவர் இந்த கல்லூரியை முற்றாக அழித்துவிடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.


இந்த நடவடிக்கைகள் தொடர்பாக மஹரகம பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.


என்றாலும் இந்த நபர் பொலிஸ் அதிகாரிகளையும் தன்பக்கம் வலைத்துக்கொண்டு, தற்போது கல்லூரியில் கல்வி கற்றுவரும் மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.


நாட்டில் இவ்வாறு பல நூறு வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் தனவந்தர்கள் வக்பு செய்துவந்த சொத்துக்களை, அவர்களின் பரம்பரையினர் அந்த சொத்துக்களை தங்கள் பக்கம் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.


அதனால் இந்த நிலை தொடர்ந்தால் வக்பு செய்யப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் தங்களின் குடும்ப சொத்து என அபகரித்துக்கொள்ளும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும்.


அதனால் கபூரிய்யா கல்லூரி பிரச்சினையை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி, இதற்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.


லோரன்ஸ் செல்வநாயகம்

1 comment:

  1. இந்த மூளை கெட்ட மந்திரிக்கு என்ன செய்யவேண்டும் என்பது பற்றி எந்த திட்டமும் இல்லை. தனிப்பட்டவர்களின் காணி, சொந்தம் பற்றி ஒரு நாட்டு சனாதிபதி தலையிட வேண்டும் என பகிரங்கமாக கருத்துத் தெரிவிக்கும் இந்த மடையனுக்கு கபூரியா அரபுக்கல்லூரியின் விவகாரத்தை தீர்க்கும் வைக்கும் யோசனைகள் எதுவும் இல்லை என்பதுன் இது போன்ற விடயங்களை பகிரங்கமாக பேசும் போது இந்த நாட்டில் நாம் பத்து வீதத்துக்குக் குறைந்த தொகையினர் இருந்து கொண்டு 90 வீதத்துக்கு அதிகமானவர்களைத் தொடர்புபடுத்தும் இது போன்ற விவகாரங்களை மிகவும் நுணுக்கமாகக் கையாள வேண்டும். அது பற்றி மூத்த அரசியல் வாதிகள், அனுபவமிக்க சட்டத்தரணிகள், அறிஞர்களின் ஆலோசனையுடன் மிக நுணுக்கமாக முன்னெடுக்க வேண்டிய விடயம் தான் இது. இது பற்றி பத்திரிகைகளுக்கு கருத்துத் தெரிவிப்பது பிரச்சினையை மேலும் சிக்கலாக்குவதைத் தவிர அதற்கு ஆக்கபூர்வமான எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது போகும். எனவே மடத்தனமாக பேச்சுக்களை விட்டு விட்டு இதுபற்றி மேலேகூறிய நன்கு அனுபவம் வாய்ந்தவர்களுடன் கலந்தாலோசனை செய்து சரியான திட்டமிட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய விடயம் என்பதை இந்த அரசியல் மக்குகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.