ரணிலின் வாயை விரைவில் மக்கள் அடைப்பார்கள்
ரணிலின் வாயை விரைவில் மக்கள் அடைப்பார்கள் என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரை வாயை மூடி உட்காருங்கள் (you shut up and sit down) என கட்டளையிட்ட அதிபருக்கு, விரைவில் பொது மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கம்புருபிட்டியவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வரலாற்றில் மிகக் கொடூரமான சர்வாதிகாரியான அடொல்ப் ஹிட்லரின் மறு அவதாரம் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அதிபர், கடும் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதாகவும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலைத் தவிர்ப்பதற்கான அவரது முயற்சிகள் தெளிவாக இருப்பதாகவும் அழகப்பெரும குறிப்பிட்டார்.
அவர் விரைவில் நாட்டு மக்களால் மௌனிக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment