தப்பித்தது இலங்கை, பெயரும் நீக்கப்பட்டது
கடந்த மே மாதம், உலகில் அதிக பணவீக்கம் உள்ள நாடுகளில் சிம்பாப்வேக்கு அடுத்தபடியாக இலங்கை இரண்டாவது இடத்தில் இருந்தது.
அமெரிக்காவின் ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கியின் சமீபத்திய பணவீக்க சுட்டெண்ணில், இலங்கை முதல் 18 இடங்களில் இருந்து வெளியேறியுள்ளது.
பதினைந்து நாட்களுக்கு முன்னர், சுட்டெண்ணில் இலங்கை 18வது இடத்தில் இருந்தது.
இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில், இலங்கை அந்த இடத்தில் இருந்து வெளியேறியுள்ளது.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை கடன் உதவியை பெற்றுக்கொள்ள கடும் முயற்சிகளை எடுத்திருந்தது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அண்மையில் இலங்கைக்கு முதல் தவணை கடன் கிடைத்திருந்து.
Post a Comment