Header Ads



கிரீஸ் நாட்டில் மிக மோசமான ரயில் விபத்து, பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள்

விபத்திலிருந்து பிழைத்திருப்பவர்களை மீட்பதற்கு அதிகாரிகள் இரவு முழுவதும் தங்களது மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.


வடக்கு கிரீஸ் பகுதியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் மிகவும் மோசமான வகையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 36 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.


செவ்வாய் கிழமை இரவு லரிசா நகரத்தின் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துக்கொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று, எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியது.


சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து தற்போது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் இந்த ரயில் விபத்தின் கோரத்தை வெளிப்படுத்துகிறது.

¨இந்த விபத்து குறித்த தகவல்கள் நள்ளிரவுக்கு சற்று முன்னதாக தங்களுக்கு கிடைத்தது என தீயணைப்புத் துறையினர் கூறியுள்ளனர்.

^அவர்கள் வந்து பார்த்தபோது பயணிகள் ரயிலின் முதல் இரண்டு பெட்டிகள் விபத்தினால் முற்றிலும் சேதமடைந்து காணப்பட்டுள்ளது


ரயில் பெட்டிகளுக்குள் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள தீயணைப்புத் துறையினரும், மீட்பு படையினரும் இரவு முழுவதும் தேடுதல் பணியை தொடர்ந்துள்ளனர்.


ரயில் விபத்திலிருந்து பிழைத்துள்ளவர்களை தாங்கள் தேடும்போது பல சோகமான காட்சிகளை கண்டதாக மீட்பு படையினர் கூறுகின்றனர்.


”ரயில் பெட்டிகளுக்குள் இருந்து நாங்கள் சிலரை பிடித்து இழுக்கும்போது சிலர் பிழைத்திருந்தனர், சிலர் காயமடைந்திருந்தனர், இன்னும் சிலர் உயிரிழந்திருந்தனர்” என்று விபத்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர் ஒருவர் அம்மாநில அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்திருந்தார்.






No comments

Powered by Blogger.