Header Ads



ஒழுக்கவியல் குழுவின் தலைவராக சமல்


ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.


நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், சமல் ராஜபக்சவின் பெயரை முன்மொழிந்ததுடன், இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட அதனை வழிமொழிந்தார்.


அதற்கமைய, ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொடரில் குழுவில் முன்வைக்கப்பட்டு பூர்த்திசெய்ய முடியாமல் போன சில விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கருத்திற்கொள்வது பற்றி கலந்துரையாடப்பட்டது.

No comments

Powered by Blogger.