காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுவன் தாயிடமிருந்து மீட்பு
- பாறுக் ஷிஹான் -
13 வயது சிறுவன் காணாமல் சென்ற நிலையில் தாய் வசம் இருந்து சவளக்கடை பொலிசார் மீட்டுள்ளனர்.
அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள சொறிக்கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய தீபன் சயான் என்ற சிறுவன் ஞாயிற்றுக்கிழமை (26) அன்று காணாமல் சென்றிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(26) வீரமுனையில் மரணவீட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில சிறுவனை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் தந்தையார் சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் குறித்த சிறுவனின் தாயாரும் தந்தையாரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில் மரணவீட்டில் இருந்து தந்தையாருக்கு தெரியாமல் அவனது நண்பனின் உதவியுடன் வவுணதீவு பகுதிக்கு தாயாரை தேடி சென்று அங்கு இருந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து செவ்வாய்க்கிழமை(28) சிறுவனை மீட்டு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
Post a Comment