உதவி கோரி அலறிய யுவதி, தப்பியோடிய நபர் மடக்கிப் பிடிப்பு
நுவரெலியாவில் வீதியில் நடந்து சென்ற யுவதியிடம் கைத்தொலைபேசியை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபரை அக்கம் பக்கத்தினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
சந்தேக நபர் 27 வயதுடைய இளைஞன் என்பதுடன், யுவதி ஒருவரின் கைத்தொலைபேசியைப் பறித்த போதுஅவர் உதவி கோரி அலறியுள்ளார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சந்தேக நபரை மடக்கிப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர்.
இன்று -18- பிற்பகல் நுவரெலியா பஸ் நிலையத்துக்குப் பின்னாலுள்ள உத்யான வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நுவரெலியா களுகெலே பிரதேசத்தில் வசிக்கும் இளைஞராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment