Header Ads



முரட்டு அரசாங்கத்தை விரட்ட, கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்


கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். 


ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 


“மக்களை கொன்று குவிக்கும் ரணில் தலைமையிலான முரட்டு அரசாங்கத்தை விரட்டும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.


மக்களின் குறைகளுக்கு செவிசாய்க்காத அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அணி திரள்வார்கள் என்பது உறுதி.


நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டங்கள், வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் ஆதரவளிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.