மதகுக்குள் விழுந்த கார்
வேகமாக பயணித்த காரொன்று மதகுக்குள் கவிழ்ந்து விழுந்து விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம், நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நோர்வூட்-ஹட்டன் பிரதான வீதியில் அயரபி பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
சனிக்கிழமை (18) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த சிறுவன், கிளங்கன்-டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்தே அந்தக்கார் மதகுக்குள் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்து எனத் தெரிவித்த நோர்வூட் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
எஸ்.சதீஸ்
Post a Comment