Header Ads



இவருடைய மௌத்துடைய செய்தி...


எங்களுக்கு ஏற்பட்ட கைசேதம்....


நாங்கள் எங்களுடைய அதானுடைய நேரத்தை காட்டும் ஒரு கடிகாரத்தை இழந்து விட்டோம்.


 இந்த நண்பன் இவருடைய வீட்டிலிருந்து பலாஹ் பள்ளியை நோக்கி நடந்து செல்வதை காணும் போதெல்லாம் நாங்கள் இதோ அதானுடைய நேரம் ஆகிவிட்டது. என்று நினைப்போம் அந்நேரம் எங்களுடைய காதுகளை அதானுடைய சத்தங்கள் வந்து முத்தமிடும்.


அவருடைய வயது வெறும் இருபத்து ஒன்று இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் ஐம்பது அறுபது வயது தொழுத மூத்தவர்களுடைய நெற்றியைப் போல் அவருடைய நெற்றியில் தொழுது தொழுது உண்டான அடையாளமொன்றை அவரைப் பார்ப்பவர்கள் அனைவரும் கண்டு கொள்வர். அந்த அளவிற்கு தொழுகை ஈடுபாடு உள்ள ஒரு வாலிபர்


பர்ள் தொழுகைகளுக்கு பின் எழுந்து எழுந்து தொழுது கொண்டே இருப்பார் ஒரு தடவை அவரை சந்திக்க இஷாத் தொழுகை முடிந்த பின் காத்திருந்தோம் அவர் பள்ளியை விட்டு வர 15 நிமிடங்களுக்கு மேல் சென்றன.


ஒவ்வொரு தடவையும் எங்களை பார்க்கும் போது கஞ்சத்தனம் இல்லாத அந்த சிரிப்பும்,பரிபூரண சலாமும் வாழ்க்கையில் மறக்கவே முடியாத பதிவுகள் 


 இவருடைய மௌத்துடைய செய்தி ஏற்றுக் கொள்ள முடியாமலே இருந்தது .ஆனால் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.அது எல்லோருக்கும் முடிவு செய்யப்பட்ட விடயம் 


இந்த துன்யாவுடைய ஒவ்வொரு நாட்களும் பித்னாவை நோக்கியே நகர்கின்றன. இப்படி இருக்கும் போது ஷஹீத் பட்டம் கிடைப்பதும் பெரும் பாக்கியம் தான் 


யா அல்லாஹ் இவருடைய மண்ணறையை சுவன பூஞ் சோலையாக ஆக்கி வைப்பாயாக!

 

இவரது குடும்பத்தினருக்கு நாங்கள் ஒரு ஷஹீதைப் பெற்றவர்கள் என்ற மனத்திருப்தியையும் மன வலிமையையும் கொடுப்பாயாக!


Ulama Fareed


No comments

Powered by Blogger.