முதலைகள் வாழும் ஆற்றில், திடீரென குதித்த பெண்
அம்பலாந்தோட்டை வளவில் உள்ள கேஜ் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த பெண் ஒருவரை மூவர் விரைந்து செயற்பட்டு காப்பாற்றியுள்ளனர்.
முதலைகள் வாழும் வளவே ஆற்றின் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த பெண் ஆற்றின் மேற்பரப்பில் சுமார் இருநூறு மீற்றர் இழுத்துச்செல்லப்பட்டதாக அங்கு கூடியிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும்,குறித்த பெண் ஆற்றில் குதிப்பதைக் கண்ட ஒருவர், அருகிலிருந்த ஒருவரின் உதவியுடன் மீட்டு பெண்ணை படகில் ஏற்றிச் சென்றுள்ளார்.
சம்பவத்தில் ஆற்றில் குதித்து உயிர் பிழைத்த பெண் அம்பலாந்தோட்டை புழுல்யாய பகுதியைச் சேர்ந்தவர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் ஆற்றில் குதித்ததற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், மீட்கப்பட்ட பெண் அம்பலாந்தோட்டை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். IB
Post a Comment