நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள பள்ளிவாசலை 3 மாதத்திற்குள் அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு
இதுதொடர்பான வழக்கு ஏற்கனவே அலகாபாத் உயர்நீதிமன்றதில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில்,. 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அலகாபாத் உயர்நீதி மன்றம், மசூதியை அகற்ற உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, வக்பு வாரியமும் மற்றும் உத்தரப் பிரதேச சன்னி முஸ்லீம்களின் வக்பு வாரியமும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார்ர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில், நேற்று (மார்ச் 13ந்தேதி) பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.
தீர்ப்பில், தற்போது மசூதி அமைந்துள்ள நிலம் குத்தகைச் சொத்து என்றும், அதற்கு உரிமை கோர முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், “இன்று முதல் மூன்று மாதங்களுக்குள் மசூதி கட்டிடத்தை அகற்றவில்லை என்றால், அதனை உயர்நீதிமன்றமோ உ.பி. அரசு அதிகாரிகளோ அந்தக் கட்டிடத்தை இடிக்கவோ அகற்றவோ நடவடிக்கை எடுக்கலாம்” என்றும் கூறியுள்ளது. அதே சமயத்தில், நீதிமன்றத்துக்கு அருகிலேயே மசூதி அமைக்க நிலம் ஒதுக்குமாறு மனுதாரர்கள் உத்தர பிரதேச அரசிடம் கோரலாம் என்றும் அனுமதி அளித்துள்ளது.
மசூதியின் நிர்வாகக் குழு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், 1950களில் இருந்து மசூதி உள்ளது என்றும், அதை வெளியே கொண்டுசெல்லச் சொல்ல முடியாது என்று கூறினார். “2017ல் ஆட்சி மாறியது, எல்லாமே மாறியது. புதிய அரசு அமைந்து 10 நாட்களுக்குப் பிறகு பொதுநல மனு தாக்கல் செய்யப்படுகிறது. அவர்கள் நிலம் கொடுத்தால் மாற்று இடத்திற்குச் செல்ல எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என்று அவர் கூறினார்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது, உத்தரப் பிரதேச அரசு மசூதியை வேறு இடத்திற்கு மாற்ற நிலம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மசூதியை நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளாகவே வேறு இடத்திற்கு மாற்ற இடம் இல்லை என்றும், மாற்று இடம் வழங்குவது பற்றி உ.பி. அரசு பரிசீலிக்கலாம் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்தது. ஏற்கனவே நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை இருப்பதாகவும் உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
இந்த பாரதூரமான நீதிமன்றத் தீர்ப்பு, உலகில் வாழும் 180 கோடி முஸ்லிம்களையும் தீண்டும் மிகவும் கவலைதரும் ஒரு தீர்ப்பு. இந்தியாவின் இனத்துவேச அரசின் தூண்டுதலின் பின்னணியில் நடைபெறும் இதுபோன்ற உலகில் இரண்டாவது பெரும்பான்மையினராக வாழும் முஸ்லிம்களுக்கு இழைக்கும் இந்த பாரதூரமான தீர்ப்பை எதிர்த்து உலக வாழ் முஸ்லிம்கள் அனைவரும் இந்திய அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தது ஒரு வார காலம் உலகில் வாழும் அத்தனை முஸ்லிம்களும் இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பகிஷ்கரித்தால் இந்தியாவின் கதை முடியும். அப்போது மோடி கண்விழிப்பான். இந்தியாவின் இனத்துவேசத்தை அடக்க இந்த குறைந்த பட்சமுடிவை எடுத்தாக வேண்டும். சவூதி அரேபியா, துபாய், கத்தார், குவைத் நாடுகள் மாத்திரம் அங்கு வேலைசெய்யும் அத்தனை இந்தியர்களையும் உடனடியாக நாட்டுக்குத் திருப்பி அனுப்பினாலும் இந்தியாவின் கதை முடிவுக்கு வரும். உலகில் முஸ்லிம்களின் இருப்புக்கு இந்த தீர்மானம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியதாகும்.
ReplyDelete