Header Ads



மகனின் மரண செய்தி கேட்டு உயிரிழந்த தாய்


 மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று முன்தினம் வவுனியா நெடுங்கேணி பகுதியில் மாடு முட்டி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நேற்று உயிரிழந்துள்ளார்.


இராசரட்ணம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் நேற்று உயிரிழந்துள்ளார்.


குறித்த மரண செய்தியை இன்று அறிந்த குறித்த குடும்பத்தரின் தாயாரான இராசரட்ணம் வீரம்மா என்ற 82 வயதுடைய முதியவரும் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் பிரதேச மக்களை சோகத்துக்குள்ளாக்கியுள்ளது.


இருவரது மரண சடங்குகளும் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியில் இடம்பெறவுள்ளது


-சப்தன்-

No comments

Powered by Blogger.