வடகொரிய அதிபரின் சகோதரியின் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் தென்கொரியா மீது உடனடி தாக்குதல் நடத்த வடகொரியா தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபரின் சகோதரி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐநா உள்ளிட்ட அமைப்புகள், உலக நாடுகளின் கடும் எதிர்பையும் மீறி அணு ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா-தென்கொரிய விமானப் படைகள் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டன.
இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் வெளியிட்ட அறிக்கையில், `அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவத்தின் நடவடிக்கைகளை வடகொரியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தேவைப்படும் நேரத்தில், அமெரிக்கா, தென்கொரியா மீது உடனடி தாக்குதல் நடத்த வடகொரிய ராணுவம் எந்த நேரமும் தயார் நிலையில் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
Post a Comment