Header Ads



நீர்கொழும்பில் அங்கவீனப் பெண் கொலை, பணமும் கொள்ளை


- Ismathul Rahuman -


அங்கவீனப் பெண் ஒருவரின் வைப்பிலிருந்த பணத்தை போலி ஆவணங்களை தயாரித்து மோசடியாகப் பெற்று அப் பெண்ணைக் கொலை செய்தமை தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


   நீர்கொழும்பு, கடொல்கலையைச் சேர்ந்த 71 வயதான ஹெரியட் பெரேரா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.


   இப் பெண் அங்கவீனமான நிலையில் இருப்பதனால் வீட்டில் சக்கர நாட்காளியை பயன்படுத்தியே வாழ்ந்துவந்துள்ளார்.


  தனது காணியின் ஒரு பகுதியை விற்பனை செய்வதற்காக ஒருவருடன் பேசி இலட்சக்கணக்கான பணத்தை முற்பணமாகப் பெற்று  வைப்பிலிட்டுள்ளார். இப் பணத்தை போலி ஆவணங்களைச் செய்து மோசடியாக பெற்றுக்கொண்டு இப் பெண்ணை கொலை செய்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


   இம் மாது மரணமடைந்திருந்த வீட்டிற்கு 14 ம்திகதி காலை நீர்கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி டாக்டர் சிறி ஜயன்த விக்ரமரத்ன விஜயம் செய்து விசாரணை நடாத்தினார். 


பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்களும், அயலவர்களும் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீர்கொழும்பு நீதிமன்றில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு திடீர் மரண விசாரணை அதிகாரி நீர்கொழும்பு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.