Header Ads



இலங்கைக்கு பெருமளவு பணம் வந்துள்ளது


தற்போது மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.  


ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 


தொடர்ந்தும் தெரிவிக்கையில், 


நாங்கள் ஏற்கனவே இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சுமார் 64 வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளோம். இந்த எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்றும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கோரப்படுகிறது.


அடுத்த சில வாரங்களுக்குள் மேலும் பல வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும். இந்த நடவடிக்கையின் மூலமும் இலங்கைக்கு பெருமளவு பணம் வந்துள்ளது.


புலம்பெயர்ந்த எமது இலங்கைத் தொழிலாளர்களுக்கு நாம் வழங்கும் கௌரவத்தையும் அங்கீகாரத்தையும் நீங்கள் பார்க்கலாம்.


தற்போது மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


எனவே, இது அவர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. மேலும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பிரத்தியேகமாக 'ஹோப் கேட்' என்ற புதிய சிறப்பு விருந்தினர்களுக்கான வாயில் திறக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.