Header Ads



இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்வதால், இலங்கையில் பறவை காய்ச்சல் பரவும் அபாயம்

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதால் இலங்கையில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் எ

ன விவசாயத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் K.B.குணரத்ன தெரிவித்துள்ளார்.


பறவைக் காய்ச்சல் அதிகம் உள்ள தமிழகத்திலிருந்து முட்டைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


மேலும், பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் அங்கு முட்டை விலை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


முட்டை தொடர்பாக இந்தியாவினால் வழங்கப்படும் தரநிலை அறிக்கை இன்று(06) கிடைக்கப்பெறும் என வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


இது தொடர்பான அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறாத காரணத்தினால் முட்டை இறக்குமதியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த அறிக்கையை இந்திய விலங்குகள் மற்றும் சுகாதாரத் துறை வழங்கவுள்ளது.

No comments

Powered by Blogger.