Header Ads



விளையாடிக் கொண்டிருந்த மாணவர் திடீரென உயிரிழப்பு


பாணந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் இன்று பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


களுத்துறை வடக்கில் வசிக்கும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குறித்த மாணவன் நண்பர்கள் குழுவுடன் விளையாடிக் கொண்டிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த பாடசாலை மாணவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக   விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.