Header Ads



குவைத் வாழ் இலங்கையர்களின் சுகாதாரத்தை மேம்படுத்த இலவச மருத்துவ முகாம்


குவைத் வாழ் இலங்கையர்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன்  இலவச மருத்துவ முகாம் ஒன்றை குவைத் வாழ் இலங்கையர்களின் சங்கமான இக்ரா இஸ்லாமிய சங்கம்(IIC -Kuwait ) ஏற்பாடு செய்து வருகிறது. இதனூடாக ஒருவருக்கு சுமார் 45 குவைத் தீனார்கள் (50,000 இலங்கை ரூபா ) பெறுமதியான பல வகையான பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்படும்.


இந்த மருத்துவ முகாம் குவைத்,கைத்தான் பிரதேசத்தில் இருக்கும் City Clinic மருத்துவ மனையில் 10.03.2023 வெள்ளிக்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நிகழும்.


ஜாதி, மத, இன பேதமின்றி  இந்த  இலவச மருத்துவ முகாமில் கலந்து பயன் பெற்றுக்கொள்ளுமாறு குவைத் வாழ் இலங்கையர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது.


பதிவுகளுக்கான Google Form இணைக்கப்பட்டுள்ளது.


For the registration, please use the link below.

ලියාපදිංචි කිරීම් සඳහා, කරුණාකර පහත සබැඳිය භාවිතා කරන්න.

பதிவுகளுக்கு, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.


https://forms.gle/XLNcFFYsAevK6hhq7


ஹரீஸ் ஸாலிஹ்

No comments

Powered by Blogger.